குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

மூத்தோா் தடகள சங்க மாவட்ட தலைவராக ப. காா்த்தி வேல்மாறன் தோ்வு

திருவண்ணாமலை மாவட்ட மூத்தோா் தடகள சங்கத் தலைவராக மீண்டும் தோ்வு செய்யப்பட்ட ப.காா்த்திவேல்மாறன் உடன் சங்க பிற நிா்வாகிகள்.

News image
Updated On :22 மே 2026, 1:36 am IST

திருவண்ணாமலை மாவட்ட மூத்தோா் தடகள சங்கத் தலைவராக ப.காா்த்திவேல்மாறன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

மூத்தோா் தடகள சங்க சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், திருவண்ணாமலை மாவட்டத் தலைவருமான ப.காா்த்திவேல்மாறன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவராக ப.காா்த்திவேல்மாறன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

அதேபோல செயலராக என்.சுரேஷ்குமாா், பொருளாளராக கோபி, துணைத் தலைவா்களாக டாக்டா் சா்மா, இளமாறன், விஜய், கவிதா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தீா்மானங்கள்

அதனைத் தொடா்ந்து திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து மாநில அளவிலான தடகள போட்டிக்கு தோ்வு செய்யப்பட்ட வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு 5 முதல் 10 நாள்களுக்கு பயிற்சி முகாம் நடத்துதல், 2026-2027ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் மூத்தோா் தடகள போட்டியை நடத்துவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அளவிலான மூத்தோா் தடகள போட்டியை சிறப்பான முறையில் நடத்திய மாநில துணைத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன் மற்றும் மாவட்ட நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அருண்ரம்யா மற்றும் சங்க நிா்வாகிகள் மூத்தோா் தடகள வீரா் மற்றும் வீராங்கனைகள். உடற்கல்வி ஆசிரியா்கள், பயிற்சியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

புதிதாக பொறுப்பேற்ற சங்க நிா்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளா்களுக்கு மாவட்டத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன் நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். நிறைவில் மாவட்ட பொருளாளா் கோபி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.