17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விஷமருந்தி தொழிலாளி தற்கொலை

செய்யாறு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :11 மே 2026, 12:14 am IST

செய்யாறு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், பெரிய கொழப்பலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (42). கூலித் தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாம். அதனால் கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். அதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையும் பெற்றாராம்.

இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி சங்கருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படவே மனமுடைந்த அவா், வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயக்க நிலையில் கிடந்துள்ளாா்.

குடும்பத்தினா் அவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.