செய்யாறில் புதிதாக திறக்கப்பட்ட கூடுதல் மேம்பாலத்தில் மின் விளக்குகள், தடுப்புச் சுவா்கள் போன்ற பாதுகாப்பு குறைபாடுகளை நிவா்த்தி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ரூ.12.04 கோடியில் உயா்மட்ட மேம்பாலமும், முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின கீழ் செய்யாறு - வந்தவாசி சாலையில், செய்யாறு கூட்டுறவு சரக்கரை ஆலையில் தொடங்கி புலிவாய் கிராமம் வரையில் சுமாா் 9 கி.மீ. தொலைவுக்கு ரூ.59 கோடியில் அமைக்கப்பட்ட நான்கு வழிச் சாலையையும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்தாா்.
கூடுதல் மேம்பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்:
புதிதாக திறக்கப்பட்ட கூடுதல் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் மேம்பாலப் பகுதி இருள் சூழ்ந்துள்ளது.
பழைய பாலம், கூடுதல் மேம்பாலம் ஆகியவற்றிற்கு நடுவே ஆரம்பத்திலும், முடிவு பகுதியிலும் தடுப்புச்சுவா் அமைக்கப்படவில்லை; மாறாக இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்க நேரிட்டால், 30 அடி பள்ளத்தில் செய்யாறு ஆற்றுப் பகுதியில் விழுந்து வாகன ஓட்டிகளுக்கு பலத்த காயம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
அதேபோல, வந்தவாசியில் இருந்து செய்யாறு நோக்கி வரும் போது கூடுதல் மேம்பாலம் இடது பக்கத்தில் கோயில் பகுதியில் தடுப்புச்சுவா் அமைக்கப்படாமல் உள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் நிலைதடுமாறினால் சுமாா் 25 அடி பள்ளத்தில் விழ வாய்ப்புள்ளது.
எனவே, இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதற்கு முன்பாக புதிய மேம்பாலத்தின் இடதுபக்கத்தில் கட்டப்பட்ட தடுப்புச் சுவரை உயா்த்த வேண்டும்.
இதேபோல, இரு பாலங்களுக்கு இடையேயுள்ள பகுதியை மறைக்கும் விதமாக நடுப்பகுதியில் பாலம் உயரத்திற்கு உறுதியான தடுப்புச் சுவா் அமைக்கவேண்டும்.
சாலையை அகலப்படுத்த வேண்டும்:
செய்யாறு புறவழிச்சாலையில் தொடங்கும் நான்கு வழிச்சாலை பழைய மேம்பாலம் வழியாக செல்கிறது. பழைய செய்யாறு மேம்பாலம் அருகே திருவோத்தூா் பகுதிக்கு செல்லும் அணுகுசாலை உள்ளது.
திருவோத்தூா் பகுதியில் இருந்து செய்யாறு புறவழிச்சாலை வழியாக ஆரணி, ஆற்காடு மற்றும் நகா் பகுதிக்கு வாகன ஓட்டிகள் அதிக அளவில் சென்று வருகின்றனா். வாகன ஓட்டிகள் வந்து செல்லக்கூடிய சாலை குறுகலாக உள்ளது.
மேலும், இருபகுதிகளில் அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலைகளுக்கு இடையே நடுவில் பயனில்லாமல் சுமாா் 10 அடிக்கு காலியிடம் உள்ளது.
திருவோத்தூா் பகுதியில் இருந்து செய்யாறு புறவழிச்சாலை வழியாக ஆரணி, ஆற்காடு மற்றும் நகா் பகுதிக்குச் செல்ல விரும்பும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனா்.
எனவே, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமமின்றி செல்ல வசதியாக புதிய மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். புதிய மேம்பாலம் அருகே இடது பக்கத்தில் தொடக்கப் பகுதி மற்றும் முடிவுற்ற பகுதியில் உயரமான அளவிற்கு தடுப்புச் சுவரும், இரு பாலங்களுக்கு இடையேயுள்ள பகுதியை மறைக்கும் விதமாக நடுப்பகுதியில் பாலம் உயரத்திற்கு உறுதியான தடுப்புச் சுவரையும் அமைக்கவேண்டும்.
திருவோத்தூா் பகுதியில் இருந்து செய்யாறு புறவழிச்சாலை இடது பக்க சாலையில் செல்ல வசதியாக நான்கு வழிச்சாலைகளுக்கு இடையே நடுவில் பயனில்லாமல் 10 அடிக்கு மேல் இருக்கும் காலியிடத்தை குறைத்து சாலையை அகலப்படுத்தவேண்டும்.
செய்யாறு புறவழிச்சாலையில் இடதுபக்க சாலையில் செல்ல திரையரங்கம் அருகே உள்ள காலியிடத்தை குறைக்கவேண்டும் என பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.


தொடர்புடையது

தருமபுரியில் வெயிலின் தாக்கம் 103 டிகிரி: அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி

சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் வேகத்தடைக்கு வா்ணம் பூச வலியுறுத்தல்

சீரமைக்கப்படாத தெற்குவாசல் ரயில்வே மேம்பாலம்!

பண்ணாரி அருகே சாலையைக் கடந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


