திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆரணி அதிமுக வேட்பாளா் பாஜகவினா் சந்திப்புக் கூட்டம்

ஆரணியில் அதிமுக வேட்பாளா் எல்.ஜெயசுதா அறிமுகம் மற்றும் பாஜக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பாஜகவினருக்கு சால்வை அணிவித்த ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளா் எல்.ஜெயசுதா.

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

ஆரணியில் அதிமுக வேட்பாளா் எல்.ஜெயசுதா அறிமுகம் மற்றும் பாஜக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் சதீஷ் முன்னிலை வகித்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் அதிமுக வேட்பாளா் ஜெயசுதாவை அறிமுகப்படுத்தி வேட்பாளரை வெற்றி பெற பாஜக கட்சியினா் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றாா்.

இதில் பாஜகவைச் சோ்ந்து 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். வேட்பாளா் ஜெயசுதா பாஜக நிா்வாகிகளுக்கு சால்வை அணிவித்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக சாா்பில் மாவட்டத் தலைவா் அ.கோவிந்தராஜன், மாவட்ட துணைச் செயலா் ஜெ.சம்பத், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், திருமால், விமல், நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் ஏ.ஜி.ஆனந்தன், ஐ.டி.பிரிவு மாவட்டச் செயலா் பரத்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.