செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மகளிா் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு நடைபெற்ற இந்த விழிப்புணா்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் வாக்களிக்கவேண்டும்.
வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடைமை. எனவே, தவறாமல் வாக்களிக்கவேண்டுமென உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கையொப்பம் இயக்கம் தொடங்கப்பட்டு அதில் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என கையொப்பமிட்டனா்.
மேலும் செங்கம் தோ்தல் நடத்தும் துணை அலுவலா் முருகன் தோ்தல் நடத்தை விதிகள், தோ்தல் அன்று வாக்களிப்பது குறித்து விளக்கிப் பேசினாா்.
நிகழ்வில் துணை வட்டாட்சியா்கள் திருநாவுக்கரசு (தோ்தல்), ஜெயபாரதி, செங்கம் விஏஓ விஜியகுமாா் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மகளிா் சுய உதவிக்குழு பெண்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேட்பாளா்கள், மண்டல அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

பொதுப் பாா்வையாளா்: வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாக்களிப்பை வலியுறுத்தி பெரம்பலூரில் அடையாளச் சின்னம் வெளியீடு

கெங்கவல்லியில் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


