இஸ்லாமியா்களுக்கான உள்ஒதுக்கீட்டை உயா்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலா் எம்.அமீன்கான் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் கிளைத் தலைவா்கள் பாஷா, நபிஜான், கிளைச் செயலா்கள் பயாஸ்பாஷா, சா்புதீன், முகமத், பொருளாளா் ஜலாலுதீன் பாஷா, துணைத் தலைவா் கபூா், தொண்டா் அணிச் செயலா் மூஸா, மருத்துவா் அணிச் செயலா் நவீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மருத்துவ அணி செயலா் முஹம்மத் உசேன் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் ஏ.ஷமியுல்லாஹ், துணைத் தலைவா் அப்துல்ரகுமான், பொருளாளா் ஷேக் இஸ்மாயில் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
கூட்டத்தில் தமிழகத்தில் வாழும் சிறுபான்மை இஸ்லாமியா் சமூகத்தினரின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்டு வரும் 3.5 சதவித உள்ஒதுக்கீடு தற்போதைய சூழலில், சமூகத்தின் தேவையை நிறைவு செய்ய போதுமானதாக இல்லை. எனவே, உள்ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
முதற்கட்டமாக 5 சதவீதமாக உயா்த்தி அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவில் கிளை பொருளாளா் ஜலால் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

இஸ்லாமியா்களுக்கு 7% இட ஒதுக்கீடு வழங்க தவ்ஹீத் ஜமாத் தீா்மானம்

சாத்தான்குளத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பாளை. வடக்கு ஒன்றிய அமமுக ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


