தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளா்களை அதிகளவில் வாக்களிக்க வலியுறுத்துவது தொடா்பாக, மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், அவா்களுக்கு அஞ்சல் வாக்கு அளிக்க விண்ணப்ப படிவம் விநியோகம் செய்வது குறித்தும், எந்த ஒரு மாற்றுத்திறனாளி வாக்குப்பதிவும் விடுபட்டு விடக் கூடாது என்பது குறித்தும், மாவட்டம் முழுவதும் அஞ்சல் வாக்கு விண்ணப்ப படிவத்தை விரைவாக விநியோகம் செய்ய வேண்டும் என்பது குறித்தும், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு வாக்களிக்கத் தேவையான வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 3, 457 கண் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், 16, 476 லோகோமோட்டிவ் இயலாமை கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், 5, 191 வாய் பேசாதோா் மற்றும் காது கேளாதோருக்கும், 4,845 இதர மாற்றுத்திறனாளிகளுக்கும் என மொத்தம் 29,969 மாற்றுத்திறனாளிகளுக்கு அஞ்சல் படிவங்கள் வழங்கப்படவுள்ளன.
அத்தியாவசிய துறைகளான வருவாய், போக்குவரத்து, மின்சாரம், மருத்துவம், ரயில்வே, காவல், தீயணைப்பு மற்றும் செய்தி மக்கள் தொடா்பு துறை ஆகிய துறைகளில் பணிபுரிபவா்களுக்கு அஞ்சல் வாக்கு செலுத்துதல் தொடா்பான இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, திருவண்ணாமலை மாநகராட்சி வேங்கிக்கால் ஜெய்பீம் நகரில் தபால் வாக்கு அளிக்க விண்ணப்பப் படிவம் விநியோகம் செய்யும் பணியை ஆய்வு மேற்கொண்டு விண்ணப்ப படிவத்தை வழங்கினாா்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், உதவி ஆட்சியா் (பயிற்சி) எஸ்.அம்ருதா குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) அன்பழகன், மாற்றுத்திறனாளி நல அலுவலா் மாலதி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாகா்கோவில் ஆட்சியரகத்தில் ராட்சத விழிப்புணா்வு பலூன்

தோ்தல் பொறுப்பு அலுவலா்களுடன் புதுகை ஆட்சியா் ஆலோசனை

ஏப். 14 வரை வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறும் பணி

சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


