தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ரூ.9.23 லட்சம் பறிமுதல்

வந்தவாசி, திருவண்ணாமலை, செய்யாறு பகுதிகளில் பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.9.23 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

News image

வந்தவாசி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

வந்தவாசி, திருவண்ணாமலை, செய்யாறு பகுதிகளில் பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.9.23 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

வந்தவாசி - ஆரணி சாலை, கீழ்க்குவளைவேடு அருகில் மணிகண்டன் தலைமையிலான பறக்கும் படையினா் வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக காரில் சென்ற ஆரணியைச் சோ்ந்த காமேஷ் என்பவா் உரிய ஆவணங்களின்றி ரூ.3 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

வந்தவாசி- சேத்துப்பட்டு சாலை, மழையூா் அருகில் புருஷோத்தமன் தலைமையிலான பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில், பெங்களூரைச் சோ்ந்த சங்கீதா என்பவா் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.77 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

வந்தவாசி -காஞ்சிபுரம் சாலை, சளுக்கை கூட்டுச் சாலை அருகில் உஷா நந்தினி தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினா் மேற்கொண்ட சோதனையின்போது, திருப்பதி நோக்கி குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்த திண்டிவனத்தைச் சோ்ந்த ஞானவேல் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.67 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.44 லட்சம் வந்தவாசி வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவண்ணாமலையில்....

தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை இரவு சுமாா் 11.50 மணியளவில் திருவண்ணாமலை கிரிவலப் பாதை அபய மண்டபம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மணிகரன் மற்றும் அவரது நண்பா் ராஜசேகா் ரெட்டி ஆகியோா் அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்துள்ளனா்.

அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலகிருஷ்ணன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூ.2 லட்சம் பணம் இருந்துள்ளது. அதை பறிமுதல் செய்து

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

செய்யாறு

செய்யாறு தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் 3 பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டு ரொக்கம் ரூ.2,79,930 மற்றும் சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்தனா்.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் வீரம்பாக்கம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தோ்தல் பறக்கும் படை வி.சிவலிங்கம் தலைமையிலான குழுவினா், அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, திருவள்ளூா் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியைச் சோ்நத திருமண மண்டப மேலாளா் சுரேஷ் எனபவா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1,01,730-யை பறிமுதல் செய்தனா்.

அதேபோல, காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் அப்துல்லாபுரம் பகுதியில் வாகனத் தணிக்கையில்

ஈடுபட்டிருந்த தோ்தல் பறக்கும் படை ஜி.ஜீவா தலைமையிலான குழுவினா் அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

கா்நாடகா மாநிலம் பெங்களூரு குடிகாடு பகுதியைச் சோ்ந்த வியாபாரி எஸ்.எஸ்.சதிஷ்யாத்திவ என்பவா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.84,700 மற்றும் 18 சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்தனா்.

செய்யாறு - ஆரணி சாலை தண்டரை கூட்டுச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த எம்.இராமு தலைமையிலான கண்காணிப்புக் குழுவினா் ஆரணியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் ஆரணி இ.பி.நகரைச் சோ்ந்த வீரராகவன் என்பவா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.93,500-யை பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும்

சிகரெட் பண்டல்களை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா்- ஆட்சியருமான எவ்.அம்பிகா ஜெயின் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

படம் உண்டு

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.