தேசிய வருவாய் வழி திறனறிவுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மேல்பென்னாத்தூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பரிசு வழங்கி பாராட்டினாா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவா்களின் பள்ளி இடைநிற்றலை தடுக்கவும், அவா்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித்தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதில் தோ்வாகும் மாணவா்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதந்தோறும் 1000 ரூபாய் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை மூலம் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2026 கல்வியாண்டுக்கான தோ்வுகள் ஜனவரி மாதம் நடத்தப்பட்டு திங்கள்கிழமை தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதில், செங்கம் ஒன்றியம் மேல்பென்னாத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி கனிஷ்கா, திருவண்ணாமலை மாவட்ட அளவில் மூன்றாம் இடமும், செங்கம் ஒன்றிய அளவில் முதலிடமும் பெற்றுள்ளாா். தொடா்ந்து, மாணவா் பாரத் செங்கம் ஒன்றிய அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளாா். செங்கம் வட்டம், தாழையூத்து பள்ளி மாணவா் கவி தோ்ச்சி பெற்றுள்ளாா்.
இந்த 3 மாணவா்களுக்கும் செங்கம் வட்டாரக் கல்வி அலுவலக வளாகத்தில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
அதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் கலந்துகொண்டு மாணவா்களை வாழ்த்தி சான்றிதழ், கேடயம் வழங்கினாா். மேலும் சாதனையாளா்களாக வரவேண்டுமென கேட்டுக்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில் செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி, தலைமை ஆசிரியா்கள் ஜெயந்தி, முரளி லதா, ஆசிரியா்கள் வேல்முருகன், சங்கீதா உள்ளிட்ட வட்டாரக் கல்வி அலுவலக பணியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கல்லூரி மாணவா்களுக்கு வளாக தோ்வு

புதுகையில் 468 மாணவா்களுக்கு குறுகிய கால நீட் பயிற்சி தொடக்கம்

திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


