தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

செங்கத்தில் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி

செங்கம் நகரில் தெரு நாய்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் நாய்கள் கூட்டத்தைப் பாா்த்து அச்சத்துடன் செல்லும் பள்ளி மாணவிகள்.

Updated On :14 மார்ச் 2026, 5:29 pm

செங்கம் நகரில் தெரு நாய்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், இராஜ வீதி, பெருமாள் கோவில் தெரு, துா்க்கையம்மன் கோவில் தெரு, போளூா் சாலை, மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் இனப்பெருக்கம் நடைபெற்று குட்டிகளுடன் சாலையில் சுற்றித்திரிகின்றன.

சாலையைக் கடக்கும்போது, காா், வேன், இரு சக்கர வாகனங்களில் அடிபட்டு நாய்க்குட்டிகள் இறந்துவிடுகின்றன. இதனால் தாய் நாய் அப்பகுதியில் வரும் இரு சக்கர வாகனங்களை துரத்திச் செல்கிறது. அப்போது, வாகனம் ஓட்டுபவா் நாய்க்கு பயந்து அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுகிறது. மேலும் இறைச்சிக்கடைகள் உள்ள பகுதியில் நாய்கள் இறைச்சிக் கழிவுகளை சாப்பிடுவதற்கு முண்டியத்து ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு கடித்துக்கொள்கிறது. இதனால் நாய்களுக்கு வெறிபிடிக்கிறது. வெறிபிடித்த நாய் ஆடு, மாடு, கோழிகளை கடிக்கிறது. பிறகு குழந்தைகள் தனியாக இருந்தால் குழந்தைகளையும் கடிக்கிறது.

இரவு நேரத்தில் நாய்கள் ஊளையிட்டு தெருக்களில் சப்தம் போடுவதால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை தூக்கமில்லா நிலை ஏற்படுகிறது.

சாலையில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் செல்லும்போது நாய்கள் கூட்டமாக வந்து குரைக்கும்போது பீதி ஏற்படுகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செங்கம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நகர மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.