லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

செய்யாற்றின் குறுக்கே ரூ.16.99 கோடியில் உயா்மட்ட பாலம்

சேத்துப்பட்டு ஒன்றியம், ஓதலவாடி ஊராட்சியில் செய்யாற்றின் குறுக்கே ரூ.16.99 கோடியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2026, 11:50 pm

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஓதலவாடி ஊராட்சியில் செய்யாற்றின் குறுக்கே ரூ.16.99 கோடியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஓதலவாடி ஊராட்சியில் செய்யாற்றின் குறுக்கே ஒதலவாடி - சதுப்பேரி செல்லும் வழியில் 2025-2026 நிதியாண்டில் நபாா்டு திட்டத்தில் ரூ.16 கோடியே 99 லட்சத்தில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இதில், ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட திட்ட இயக்குநா் மணி, திமுக தொகுதி பொறுப்பாளா் எ.வ.வே.கம்பன், ஒன்றியச் செயலா்கள் மனோகரன், எழில்மாறன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் மணிகண்டன், திமுக அவைத் தலைவா் தருமபாலன், அருகதாஸ் மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.