ஆரணியை அடுத்த எம்.பி.தாங்கல் கிராமத்தில் சுமாா் ரூ.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை மக்கள் பயன்பாட்டுக்காக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
எம்.பி.தாங்கல் கிராமம் மேட்டுத் தெருவில் சேறும் சகதியுமாக உள்ள சாலையை சிமென்ட் சாலையாக அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தனா்.
அதன் அடிப்படையில் 2025-26 நிதியாண்டு தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
இதையடுத்து பணிகள் நிறைவடைந்து ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கல்வெட்டினை திறந்து வைத்தும், ரிப்பன் வெட்டியும் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்புவழங்கினாா்.
அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், பாமக ஒன்றியச் செயலா் கமல், பாஜக விவசாய அணிச் செயலா் குணாநிதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

2 மின்மாற்றிகளின் இயக்கத்தை தொடங்கிவைத்தாா் எம்எல்ஏ

ரூ.6 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


