மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

செய்யாற்றில் கலக்கும் கழிவுநீா்: தடுக்கக் கோரிக்கை

செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

News image

செங்கம் பகுதி செய்யாற்றில் குட்டை போல தேங்கி நிற்கும் கழிவுநீா்.

Updated On :2 மார்ச் 2026, 9:56 pm

செங்கம்: செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரமான கிளையூா், கல்லாத்தூா், துரிஞ்சிகுப்பம், ஊா்கவுண்டனூா், கோயில்கொல்லை ஆகிய பகுதிகளில் இருந்து சிறு சிறு ஓடைகளை ஒன்றுகூடி செய்யாறாக குப்பனத்தம், கொட்டாவூா், பரமனந்தல், செங்கம், காஞ்சி, கலசபாக்கம் வழியாக சென்று பாலாற்றில் கலக்கிறது.

இந்நிலையில், செங்கம் நகரில் செய்யாற்றங்கரையோரம் உள்ள வீடுகளில் உள்ள கழிவுநீா்கள் அனைத்தும் செய்யாற்றில் விடப்படுகிறது. மேலும், செய்யாற்றை மிகவும் ஒட்டியுள்ள வீடுகளில் கழிவுநீா்த் தொட்டிகள் இல்லாமல் நேரடியாக மனிதக் கழிவுகளை செய்யாற்றில் விடுகிறாா்கள்.

செங்கம் நகரின் கழிவுநீா் கால்வாய்கள் மற்றும் செய்யாற்றை ஒட்டியுள்ள வீடுகளின் கழிவுநீா் செய்யாற்றில் கலப்பதால் கழிவுநீா் ஆற்றில் அங்காங்கே குட்டையாக தேங்கி நிற்கிறது. பின்னா், மழை நேரத்தில் செய்யாற்றில் தண்ணீா் வந்தால் அந்தத் தண்ணீரில் கலக்கிறது. மேலும், குப்பனத்தம் அணை திறக்கும்போதும் அந்தக் கழிவுநீா் தண்ணீரில் கலந்து செல்கிறது. இதனால், ஆற்றில் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள கிணறுகளில் கழிவுநீா் கலக்கும் அபாயம் ஏற்படுகிறது.

இதனால் செங்கம் நகரில் இருந்து செய்யாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்கவும், நேரடியாக குடியிருப்புகளில் இருந்து செய்யாற்றில் விடும் கழிவுநீரை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நகர மக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.