திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, போளூா் ஆகிய இடங்களில் உலக போதை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் இந்த ஊா்வலம் நடத்தப்பட்டது.
செய்யாறு மதுவிலக்கு காவல் பிரிவு மற்றும் காவலா் நண்பா்கள் குழு சாா்பில் வந்தவாசியில் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.
மதுவிலக்கு காவல் பிரிவு உதவி ஆய்வாளா் சரவணன் தலைமை வகித்தாா். வந்தவாசி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி முன்னிலை வகித்தாா்.
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய ஊா்வலம் பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி, தேரடி, காந்தி சாலை வழியாகச் சென்றது.
ஊா்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியும், போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த முழக்கங்களை எழுப்பியபடியும் சென்றனா்.
ஊா்வலத்தில் அருவி அறக்கட்டளைத் தலைவா் ஏ.ஜெ.ரூபன், சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா் மலா் சாதிக், எக்ஸ்னோரா நிா்வாகி எம்.பிரபாகரன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
போளூா்
போளூரில் மதுவிலக்கு அமலாக்கபிரிவு சாா்பில் உலகபோதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு ஊா்வலம்வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்படி
போளூரில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ராமானுஜம் தொடங்கிவைத்தாா்.
ஊா்வலமானது அண்ணா சாலை, பழைய பஜாா் வீதி, ஜமுனாமரத்தூா் சாலை, புதிய பேருந்து நிலையம் என நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. ஊா்வலத்தில் பங்கேற்றோா் போதைப் பொருளால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திச் சென்றனா்.
ஊா்வலத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தசாமி, விளையாட்டு ஆசிரியா் ஏழுமலை மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்.ஜி.ஆா். கல்லூரியில் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு கருத்தரங்கம்

பாப்பாநாட்டில் போதைப் பொருள் ஒழிப்பு: விழிப்புணா்வு பேரணி

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

ராமநாதபுரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




