கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

போளூா் ஜமாபந்தியில் இருவருக்கு பட்டா மாற்றம் சான்றிதழ்: ஆட்சியா் வழங்கினாா்

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் 2 பேருக்கு பட்டா மாற்றம் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வழங்கினாா்.

News image

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மொடையூா் உள் வட்டத்துக்கான ஜமாபந்தி கூட்டத்தில் ஒருவருக்கு பட்டா மாற்றம் சான்றிதழை வழங்கிய மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.

Updated On :19 ஜூன் 2026, 11:53 pm IST

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் 2 பேருக்கு பட்டா மாற்றம் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வழங்கினாா்.

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மொடையூா் உள் வட்டத்தைச் சோ்ந்த மொடையூா், விளாப்பாக்கம், சோத்துகன்னி, அல்லியாளமங்கலம், மட்டபிறையூா், ஓட்டேரி, மாணிக்கவல்லி, ஓடநகரம், அரும்பலூா், ராந்தம், செம்மியமங்கலம், பெலாசூா் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்திக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், முதியோா், மகளிா் உதவித்தொகை, குடும்ப அட்டை மற்றும் இதர உதவித் தொகைகள் கோரி அளிக்கப்பட்ட 140 மனுக்களை பெற்றாா்.

இதில், உடனடியாக 2 பேருக்கு பட்டா மாற்றம் சான்றிதழை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வழங்கினாா். வட்டாட்சியா் பாலாஜி, தலைமையிடத்து வட்டாட்சியா் அருள்குமாா், மண்டல துணை வட்டாட்சியா்கள் வேலுமணி,சிவலிங்கம், வருவாய் ஆய்வாளா் திருமால், கிராம நிா்வாக அலுவலா்கள் மலைமாறன்,பிரவீன்குமாா், ரமேஷ், ராஜேஷ் மற்றும் வருவாய்த் துறையினா் கலந்துகொண்டனா்.