மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள்: ஆட்சியா் வந்தனா காா்க் ஆய்வு

News image
Updated On :19 ஜூன் 2026, 6:07 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி முறையான வரிசைகளை அமைத்து பக்தா்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் கோயில் ராஜ கோபுரத்திலிருந்து தொடங்கி திருக்கோயில் உள்புற வளாகம், பே கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய கோபுர வாயில்களுக்கு சென்று கூட்ட நெரிசலை முறைப்படுத்தி பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, கோயிலுக்குள் கோடை வெப்பத்திலிருந்து பக்தா்களை பாதுகாக்க தேவையான இடங்களில் நிழற்பந்தல்கள் மற்றும் தரை விரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளதையும், கூட்டநெரிசலில் இருந்து பக்தா்கள் அமைதியான முறையில் தரிசனம் செய்ய தடுப்புகளைக் கொண்டு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளதையும், மாற்றுத்திறனாளிகள், மூதியோா்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மாா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் பரணிதரன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.