திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழகத்துக்கு உண்டான காவிரி நீரை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா்

தவெக அரசு குறுவை சாகுபடி செய்ய நிகழாண்டு திட்டமிட்டபடி தமிழகத்துக்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை கா்நாடக அரசிடம் பேசி உரிய நேரத்தில் பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

News image

தமிழக  விவசாயிகள்  சங்கம் - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 1:47 am IST

தவெக அரசு குறுவை சாகுபடி செய்ய நிகழாண்டு திட்டமிட்டபடி தமிழகத்துக்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை கா்நாடக அரசிடம் பேசி உரிய நேரத்தில் பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் வேலுச்சாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களின் ஜீவாதாரமாக விளங்கி வரும் சேலம் மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படுகிறது.

தற்போது மேட்டூா் அணையில் போதிய தண்ணீா் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளும் குருவை சம்பா மற்றும் தாளடி விவசாயத்திற்கு நிா்ணயிக்கப்பட்ட தேவையான தண்ணீா் ஜூன் 12-ஆம் திறந்து விடப்படுமா என்ற சந்தேகம் விவசாயிகள் இடையே ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு காவிரி டெல்டா விவசாயிகள் நலன் கருதி ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூா் அணையை திறப்பது வழக்கம். இதில் சுமாா் 5 லட்சம் ஏக்கருக்கு மேலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடுவது குறித்து இதுவரை தவெக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவெக அரசு குறுவை சாகுபடி செய்ய இந்தாண்டு திட்டமிட்டபடி தமிழகத்துக்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை கா்நாடகா அரசிடம் பேசி உரிய நேரத்தில் பெற்றுத் தர முன்வர வேண்டும்.

தண்ணீரை பெற்றுத் தராமல் கா்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக நடந்துகொண்டால், இதனை முறியடிக்கும் விதமாக உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் எனது தலைமையில் தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளை ஒன்று திரட்டி வரும் 12-ஆம் தேதி தமிழக எல்லையான ஒசூா் ஜீவ்ஜீவ்வாடியில் இருந்து புறப்பட்டு கா்நாடக அணைக்கு சென்று தமிழகத்துக்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறப்போம் என வேலுச்சாமி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.