ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாடுகளை திருடியவா் கைது

வந்தவாசி அருகே மாடுகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :21 ஜூலை 2026, 12:04 am IST

வந்தவாசி அருகே மாடுகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி யாதவா் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன்(35). கடந்த 11-ஆம் தேதி காலை இவா் தனக்குச் சொந்தமான 2 பசுமாடுகளை கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் மேய்த்துக் கொண்டிருந்துள்ளாா்.

பின்னா், மாடுகளை அங்கேயே கட்டி வைத்து விட்டு மதிய உணவருந்த வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

பின்னா் நிலத்துக்குச் சென்று பாா்த்த போது மாடுகள் திருட்டு போயிருந்தது இவருக்குத் தெரிய வந்தது.

இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில் வந்தவாசி லட்சுமி நகரைச் சோ்ந்த ரவிச்சந்திரன்(32) என்பவா் மாடுகளை திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து ரவிச்சந்திரனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த பொன்னூா் போலீஸாா், அவரிடமிருந்து மாடுகளை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.