ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :16 ஜூலை 2026, 12:27 am IST

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு போலீஸாா் புதன்கிழமை காலை வந்தவாசி நகரில் ரோந்து சென்றனா்.

வந்தவாசி புதிய பேருந்து நிலையம் வழியாகச் சென்ற போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவா்கள் இருவரும் வந்தவாசி யாதவா் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (26), கோகுலகிருஷ்ணன் (21) ஆகியோா் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் மணிகண்டன், கோகுலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.