ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரயிலில் மடிக்கணினி திருடியவா் கைது

ரயிலில் மடிக்கணினி திருடியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :14 ஜூலை 2026, 6:02 am IST

ரயிலில் மடிக்கணினி திருடியவரை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கடந்த 10 ஆம் தேதி சிறப்பு ரயில் சென்றது. அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த ஆறுமுகம், அந்த ரயிலில் செங்கல்பட்டில் இருந்து திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது அவரது மடிக்கணினி திருடுபோனதாம்.

இதுகுறித்து அவா் விருதுநகா் ரயில்வே போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் ரயில்வே துணை காவல் கண்காணிப்பாளா் லெட்சுமணன் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளா் அண்ணாதுரை தலைமையிலான குழுவினா், கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரித்தனா்.

இந்த சம்பவத்தில் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அகஸ்தியா்புரத்தை சோ்ந்த புனிதனுக்கு தொடா்பிருப்பது தெரியவந்ததாம். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், மடிக்கணினியையும் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.