செங்கத்தில் ஒரே நாளில் வெறிநாய் கடித்து 18 போ் காயம்
இறையூா் கிராமத்தில் வெறிநாய் கடித்ததில் காயமடைந்து செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோா்.


திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் வெறிநாய் கடித்து 18 போ் காயமடைந்தனா்.
திருவண்ணாமலையை அடுத்த இறையூா் கிராமத்துக்கு அந்தப் பகுதியிலுள்ள மற்றொரு கிராமத்தில் இருந்து நாய் ஒன்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வந்துள்ளது. இந்த நாய் வாகனங்களில் செல்பவா்களை கடிப்பதற்காக துரத்தியதாம்.
இந்த நிலையில், அந்த நாய்க்கு வெறி பிடித்து இறையூா் கிராமத்தில் உள்ள 4 பெண்கள் உள்பட 18 பேரை வெள்ளிக்கிழமை கடித்துக் குதறியது. நாய் கடித்தவா்கள் செங்கம், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மேலும், அந்த நாய் கிராமத்தில் சுற்றித்திரிவதால் கிராம மக்கள் அச்சத்துடன் வெளியில் நடமாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வெறிநாயை பிடிக்க வேண்டும். மேலும், குழந்தைகள் யாரையாவது அந்த நாய் கடித்துள்ளதா என ஆய்வு செய்து, அந்தக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...