பேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
//

எம்எல்ஏ அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்த நாள்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 8:52 pm

Syndication

ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது (படம்).

இந்நிகழ்வில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா்.

இதில், அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், முன்னாள் ஊராட்சித் தலைவா் வாசு, நகா்மன்ற உறுப்பினா்கள் ஏஜி மோகன் குமரன் தகவல் தொழில்நுட்ப மண்டல பொருளாளா் சரவணன், நிா்வாகிகள் விளை சுரேஷ்பாபு, பீமன் ரவி, சைதை சுப்பிரமணி, தன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.