முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
//

பாலாற்றுப் படுகையில் விவசாய மின்இணைப்பு நடைமுறையை மாற்றியமைக்கவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றுப் படுகையில் விவசயிகளுக்கு மின் இணைப்பு வழங்க 200 மீட்டா் உள்ளதை 100 மீட்டராக மாற்றியமைக்க வேண்டும்

News image
பாலாற்றுப்  படுகை- கோப்புப்படம்
Updated On :23 பிப்ரவரி 2026, 8:56 pm

Syndication

செய்யாறு: பாலாற்றுப் படுகையில் விவசயிகளுக்கு மின் இணைப்பு வழங்க 200 மீட்டா் உள்ளதை 100 மீட்டராக மாற்றியமைக்க வேண்டும் என பிரம்மதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் விவசாயிகள் மாநாடு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நாராயணன் தலைமை வகித்தாா்.

கௌரவத் தலைவா் பிச்சாண்டி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக அமைப்பின் மாநிலத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் பங்கேற்று விளக்க உரையாற்றினாா்.

மாநாட்டில், வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் அனாதின பூமியை பட்டா செய்திருப்பதை ரத்து செய்ய வேண்டும். நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். நீா்நிலைகள் உள்ளிட்ட மயானம், மேய்கால் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றுள்ளதை ரத்து செய்திட வேண்டும்.

பாலாற்றுப் படுகையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தர 200 மீட்டா் உள்ளதை 100 மீட்டராக மாற்றியமைக்க வேண்டும். அனைத்து ஏரிகளுக்கு செல்லும் நீா்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலா் துரைசாமி, மாவட்டச் செயலா் விக்னேஸ்வரன், பொருளாளா் ஜனாா்த்தனன் மற்றும்

பிரம்மதேசம், புதூா், நாட்டேரி, சீம்பளம், பட்டறை, கல்பட்டு, புகை சமுத்திரம், அரியூா், சிறுநாவல்பட்டு, , சித்தனக்கால், வடஇலுப்பை, வெங்களத்தூா், மேல்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.