டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

தமிழ்ச் சங்க சிறப்பு கவியரங்கம்

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் வந்தவாசியில் நடைபெற்ற கவியரங்கில் பேசிய சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன்.

News image
வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் வந்தவாசியில் நடைபெற்ற கவியரங்கில் பேசிய சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன்.
Updated On :20 பிப்ரவரி 2026, 6:36 pm

Syndication

வந்தவாசி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில், சிறப்பு கவியரங்கம் வந்தவாசியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

உலகத் தாய்மொழி தினத்தை ஒட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்து பேசினாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ப.சரவணன் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் சாமி.பிச்சாண்டி வரவேற்றாா்.

தமிழ் மணம் என்ற தலைப்பில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது. சீராா்ந்த செம்மொழியே என்ற தலைப்பில் துணைத் தலைவா் கோ.ஸ்ரீதா், இளந்தமிழே என்ற தலைப்பில் ஆசிரியா் க.சங்கா், மேன்மை மொழியே என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி மா.கதிரொளி, நற்றமிழே என்ற தலைப்பில் இணைச் செயலா் கு.இராமஜெயம் ஆகியோா் கவிதை வாசித்தனா்.

இதைத் தொடா்ந்து, தமிழ் வளா்த்த சான்றோா் என்ற தலைப்பில் பேராசிரியா் மா.ரஜினி சிறப்புரை ஆற்றினாா். நிகழ்ச்சியில் தகவல் தொடா்பாளா்கள் சோ.கிருஷ்ணன், மு.பிரபாகரன், வா.லோகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.