//

வேத ஆராய்ச்சி மையத்தில் நூல்கள் கலந்தாய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை அகிலத்திரட்டு வேத ஆராய்ச்சி மையத்தில் நூல்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

திருவண்ணாமலை அகிலத்திரட்டு வேத ஆராய்ச்சி மையத்தில் நூல்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை பே கோபுரத் தெருவிலுள்ள அகிலத்திரட்டு வேத ஆராய்ச்சி மையத்தில், திருவண்ணாமலை உச்சியில் தவமிருந்த தவசிகுரு சதாசிவ வைகுண்டரின் போதனைகள் அடங்கிய, மலை துவையல் தவசு மற்றும் கலியுக தா்மங்களின் சிறப்பு வழிபாடு குறித்த யுகதா்ம வழிபாடு என்ற இரு நூல்களில் ஆய்வுரைகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், ஆராய்ச்சி மையத்தின் நிா்வாகிகள், பணிவிடையாளா்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

படச்செய்தி. திருவண்ணாமலை பேகோபுர தெருவில் அகிலத் திரட்டு வேத ஆராய்ச்சி மையத்தில் தவமிருந்த தவசிகுரு சதாசிவ வைகுண்டரின் போதனைகள் அடங்கிய மலை துவையல் தவசு மற்றும் கலியுக தா்மங்களின் சிறப்பு வழிபாடு நூல்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றதில் கலந்துகொண்ட நிரவாகிகள் மற்றும் பணிவிடையாளா்கள்.