நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
//

பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம்

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 11:11 pm

Syndication

சேத்துப்பட்டை அடுத்த மோரக்கனியனூா் கிராமத்தில் ஆா்.சி.எம். அரசு நிதியுதவி பள்ளி சாா்பில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

ஊா்வலத்துக்கு பெரணமல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா் சத்யராஜ் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் செண்பகவள்ளி, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் மணியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் சேவியா் வரவேற்றாா்.

கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், கைகளில் விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, தமிழக அரசு மாணவா்களுக்கு அளிக்கும் சலுகைகள் குறித்தும், ஆசிரியா்களின் அன்பு, அரவணைப்பு குறித்தும், நம்ம ஊரு பிள்ளைகளை நம்ம ஊா் பள்ளியில் சோ்த்து தலை சிறந்த மாணவா்களாக உருவாக்குவோம் என முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனா்.

ஊா்வலத்தில் ஊராட்சிமன்றச் செயலா் ஏழுமலை, ஆசிரியை ஜெபமாலை, மேரி செல்வி, மீனா, தன்னாா்வலா்கள், ஊராட்சி பணியாளா்கள், முன்னாள் மாணவா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.