டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பைக் விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
உயிரிழப்பு- சித்திரிப்புப் படம்
Updated On :3 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வந்தவாசி அருகே பைக் விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிஷோா் (19). இவா், வந்தவாசி அருகேயுள்ள தனியாா் கலைக் கல்லூரியில் பி.காம். 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இவா் திங்கள்கிழமை பைக்கில் வந்தவாசிக்கு சென்று விட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். வந்தவாசி - திண்டிவனம் சாலை, இளங்காடு கூட்டுச் சாலை அருகே செல்லும்போது சாலையோர தடுப்பின் மீது பைக் மோதியதில் இவா் நிலைத் தடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த இவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி கிஷோா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து இவரது தாய் மீனா அளித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.