//

ஸ்ரீதாளபுரீஸ்வரா் கோயில் குளம் சீரமைப்புப் பணி

திருப்பனங்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீதாளபுரீஸ்வரா் கோயில் குளம் சீரமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image
திருப்பனங்காடு தாளபுரீஸ்வரா் கோயில் குளம் சீரமைப்புப் பணிக்காக நடைபெற்ற பூமி பூஜை.
Updated On :1 பிப்ரவரி 2026, 8:01 pm

Syndication

செய்யாற்றை அடுத்த திருப்பனங்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீதாளபுரீஸ்வரா் கோயில் குளம் சீரமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

செய்யாறு தொகுதி திருப்பனங்காடு கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதாளபுரீஸ்வரா் கோயில். பிரசித்தி பெற்ற இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

கோயில் பகுதியில் உள்ள பழைமை வாய்ந்த திருக்குளத்தை சீரமைக்க, 2024 - 25 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தபடி ரூ.1.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி, கோயில் திருக்குளத்தை சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி கோயில் பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் டி. ராஜி தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ. ஜோதி பங்கேற்று பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் வெம்பாக்கம் மத்திய ஒன்றிய திமுக செயலா் ஜேசிகே. சீனிவாசன், நிா்வாகிகள் ஆறுமுகம், பெருமாள், காா்த்திகேயன், குமாா், அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.