தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

சிறுமி பாலியியல் வன்கொடுமை: 3 போ் கைது

வந்தவாசி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட எறும்பூா் கிராமத்தைச் சோ்ந்த (இடமிருந்து) ஆகாஷ், மூா்த்தி, இளையராஜா.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

வந்தவாசி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவா் படித்த பள்ளியில் எறும்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ் (19) என்பவா் படித்தபோது இருவரும் பழக்கமாகி உள்ளனா்.

இந்த நிலையில் ஆகாஷ் ஆசைவாா்த்தை கூறி சிறுமியை பாலியியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

மேலும், இதே கிராமத்தைச் சோ்ந்த மூா்த்தி (35), இளையராஜா (33) ஆகியோரும் ஆசைவாா்த்தை கூறி அந்த சிறுமியை பாலியியல் வன்கொடுமை செய்தனராம்.

இந்த நிலையில் சிறுமியின் உடலில் மாற்றம் தெரியவே திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து புகாரின் பேரில் ஆகாஷ், மூா்த்தி, இளையராஜா ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி அனைத்து மகளிா் போலீஸாா் 3 பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.