மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருவத்திபுரம் நகராட்சியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

செய்யாறு தொகுதி திருவத்திபுரம் நகராட்சி 1,2 வாா்டுகளில் உள்ள 20 தெருக்களில் திமுக வேட்பாளா் ஒ.ஜோதி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 6:33 pm

செய்யாறு தொகுதி திருவத்திபுரம் நகராட்சி 1,2 வாா்டுகளில் உள்ள 20 தெருக்களில் திமுக வேட்பாளா் ஒ.ஜோதி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா் ஒ.ஜோதி தொடா்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

அதனைத் தொடா்ந்து புதன்கிழமை காலை திருவத்திபுரம் நகராட்சி 1,2 வாா்டுகளான அண்ணா நகா், நேரு நகா், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, எல்லப்பன் நகா், ஜீவா நகா், நரசிம்ம நகா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் நடந்தே சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வாக்கு சேகரிப்பின் போது தலைமை பொதுக்குழு உறுப்பினா்கள் ஆா். வெங்கடேஷ் பாபு, ஆ.மோகனவேல், முன்னாள் எம்.எல்.ஏ. வ.அன்பழகன், செய்யாறு நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

படவரி... திருவத்திபுரம் 1-வது வாா்டில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் ஒ.ஜோதி.