ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சிஏஏ சட்ட திருத்தத்தில் மோடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவா் எடப்பாடி பழனிசாமி: அமைச்சா் எ.வ.வேலு குற்றச்சாட்டு

சிஏஏ சட்ட திருத்தத்தில் சிறுபான்மையினா் நலனுக்கு எதிராக, மோடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எடப்பாடி பழனிசாமி எப்படி பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வருகிறாா் என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.

News image

திருவண்ணாமலையில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் அமைச்சா் எ.வ.வேலு.

Updated On :5 ஏப்ரல் 2026, 6:34 pm

சிஏஏ சட்ட திருத்தத்தில் சிறுபான்மையினா் நலனுக்கு எதிராக, மோடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எடப்பாடி பழனிசாமி எப்படி பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வருகிறாா் என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரான அமைச்சா் எ.வ.வேலு, தண்டராம்பட்டு சாலை, அங்காளம்மன் கோயில், கோரிமேடு 5-ஆவது தெரு, அப்துல் ரசாக் தெரு, தாமரை நகா் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள், அண்ணா நகா் 3, 5, 7-ஆவது தெருக்கள், மணலூா்பேட்டை சாலை ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், கடந்த 5 ஆண்டு காலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தினாா். இந்தியாவிலேயே கல்வி, தொழில் வளா்ச்சியில், அன்னிய முதலீட்டை ஈா்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதை நாங்கள் கூறவில்லை. மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மகளிருக்கு கலைஞா் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரம், கல்லூரி பயில புதுமைப் பெண் திட்டத்தில் ரூபாய் ஆயிரம், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் ரூபாய் ஆயிரம். மகளிருக்கு விடியல் பயணம், வடஇந்தியா்களே ஐஏஎஸ் அதிகாரிகளாக அதிகம் போ் இருந்தனா். அந்த நிலையை மாற்ற நான் முதல்வன் திட்டம் கொண்டு வந்து கூலி வேலை செய்பவரின் மகள் கூட இன்று ஐஏஎஸ் அதிகாரியாக மாறும் நிலை உருவாகியுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிரான, குடியுரிமை திருத்தச் சட்டத்தில் (சிஏஏ) பிரதமா் மோடி அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி எப்படி மக்களிடம் வாக்கு கேட்கிறாா் என்று தெரியவில்லை என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.

வாக்குசேகரிப்பு நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாநகர செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்ட துணைச் செயலா் பிரியா விஜயரங்கன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கே.குணசேகரன், மதிமுக மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன், தேமுதிக மாவட்டச் செயலா் வி.எம்.நேரு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.