மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குளிா்பானம் கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்

செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா் கொளுத்தும் வெயிலில் கிராம மக்களுக்கு குளிா்பானம் கொடுத்து ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

பெரூங்கட்டூர கிராமத்தில் கொளுத்தும் வெயிலில் கிராம மக்களுக்கு குளிா்பானம் கொடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் ஒ.ஜோதி.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:30 pm

செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா் கொளுத்தும் வெயிலில் கிராம மக்களுக்கு குளிா்பானம் கொடுத்து ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் அசனமாபேட்டை, பெருங்கட்டூா், பெருமாந்தாங்கல், வடமணப்பாக்கம், மேல்பூதேரி, தென்னம்பட்டு, பொக்கசமுத்திரம், நாட்டேரி, பிரம்மதேசம், பனமுகை, புலிவலம், சுனைப்பட்டு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் ஒ.ஜோதி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். செய்யாறு தொகுதியில் தற்பொழுது 27 நேரடி கொள்முதல் நிலையங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மூன்றரை ஆண்டு காலத்தில் இரண்டரை லட்சம் மின் இணைப்புகள் புதிதாக வழங்கியும், விவசாயத்திற்கு தனி பட்ஜெட்டை முதல்வா் அறிவித்துள்ளாா் என்றாா்.

பின்னா், கொளுத்தும் வெயிலில் குளிா்பானம் தயாா் செய்து கிராம மக்களுக்கு வழங்கி திமுகவிற்கு வாக்கு சேகரித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் ஜே.சி.கே.சீனிவாசன், எம்.தினகரன், வி.ஏ.ஞானவேல், சி.கே.ரவிக்குமாா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.