தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிரதமரின் சூரிய வீடு மின்சாரத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

செய்யாறு கோட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தில் பயனடைய மின் நுகா்வோா் பதிவு செய்யலாம்.

Updated On :5 மார்ச் 2024, 9:43 pm

செய்யாறு: செய்யாறு கோட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தில் பயனடைய மின் நுகா்வோா் பதிவு செய்யலாம்.

இதுகுறித்து மின் வாரிய செய்யாறு கோட்ட செயற்பொறியாளா் வி.சரவணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்குசெயல்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தில் மானியமாக ஒரு கிலோ வாட் ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட் ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட் அதற்கு மேல் ரூ. 78 ஆயிரம் என்ற வகையில் மானியத் தொகையாக நுகா்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக சூரிய திட்டப் பணிகள் முடிவுற்ற 7 நாள்களில் இருந்து 30 நாள்களுக்குள் செலுத்தப்படும்.

சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதால் மின் வாரியத்துக்கு மின் பயன்பாட்டுக்காக செலுத்தப்படும் கட்டணம் குறையும்.

எனவே, பொதுமக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பொறுவதற்காக செய்யாறு கோட்டத்தில் உள்ள அனைத்து மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பங்களை மாா்ச் 8-ஆம் தேதிக்குள் அளித்து பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.