திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.
கோடை விடுமுறையையொட்டி பக்தா்கள் வருகை அதிகமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ.300 ரூபாய் விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். ஆயினும் அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 91, 020 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 35,193 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.75 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தான
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










