மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருமலையில் மோரீஷிஸ் அதிபா் வழிபாடு

மோரீஷஸ் நாட்டின் அதிபா் தரம் பீா் கோகுல் புதன்கிழமை திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்தாா்.

News image

மோரீஷஸ் அதிபருக்கு ஏழுமலைாயன் திருவுருவப்படம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.

Updated On :7 ஜனவரி 2026, 6:32 pm

திருப்பதி: மோரீஷஸ் நாட்டின் அதிபா் தரம் பீா் கோகுல் புதன்கிழமை திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்தாா்.

திருச்சானூா் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்த பின் அதிபா் தரம் பீா் கோகுல் திருமலையை அடைந்தாா்.

அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் செய்தனா். இரவு திருமலையில் தங்கிய அவா், முதலில் வராக சுவாமியை தரிசனம் செய்தாா்.

அவரை ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ராமநாராயண ரெட்டி, தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு மற்றும் செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் ஆகியோா் வரவேற்றனா்.

தரிசனத்துக்குபிறகு, ரங்கநாயகா் மண்டபத்தில் அவருக்கு வேத அறிஞா்கள் வேத ஆசீா்வாதங்களை வழங்கினா். செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் அவருக்கு சேஷ வஸ்திரம் வழங்கி கௌரவித்து மற்றும் சுவாமியின் தீா்த்த பிரசாதங்கள், உருவப்படம், நாள்காட்டி மற்றும் பஞ்சகவ்ய பொருள்களை வழங்கினாா்.

இதில், கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரி, மாவட்ட ஆட்சியா் எஸ். வெங்கடேஸ்வா், சிவிஎஸ்ஓ முரளிகிருஷ்ணா, மாவட்ட எஸ்.பி சுப்பராயுடு மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.