டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மோகினி அவதாரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி உலா

சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான வியாழக்கிழமை மோகினி அவதாரத்தில் சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான வியாழக்கிழமை மோகினி அவதாரத்தில் சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.

திருப்பதியிலிருந்து 12 கி மீ தொலைவில் உள்ள இக்கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

இதையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபனத் திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்பு மாலை ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவமூா்த்திகள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தாா்.

வாகன சேவைக்கு முன்னும் பின்னும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரம்மோற்சவத்தை ஒட்டி கோயில் மற்றும் மாடவீதிகள் வண்ண மின்விளக்குகளாலும், மலா்களாலும் அலங்கரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ஜேஇஓ வீரபிரம்மன், கோயில் சிறப்பு ரேஞ்ச் துணை இஓ வரலட்சுமி, ஏஇஓ கோபிநாத், வைகானச ஆகம ஆலோசகா்கள் மோகன ரங்காச்சாரியு, கோயில் ஆய்வாளா் கிரண்குமாா் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.