டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

சீனிவாசமங்காபுரம் கல்யாண் வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்ற கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்.

News image
சீனிவாசமங்காபுரம் கல்யாண் வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்ற கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்.
Updated On :6 பிப்ரவரி 2026, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.

திருப்பதியிலிருந்து 12 கி. மீ தொலைவில் சீனிவாசமங்காபுரத்தில் எழுந்தருளியுள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத திருவோண நட்சத்திரத்தன்று முடிவுறும்படி வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறும்.

நிகழாண்டு பிப். 8 முதல் 16 வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்பட உள்ளது.

அதற்காக வியாழக்கிழமை கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.

இதற்காக, வியாழக்கிழமை அதிகாலையில் சுப்ரபாதத்துடன் பெருமாளை துயில் எழுப்பி தோமலைசேவை, கொலுவு மற்றும் பஞ்சாங்கபடனம் செய்யப்பட்டது.

அதன் பின்னா் காலை 6.30 மணி முதல் காலை 11 மணி வரை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. கோயில் வளாகம், சுவா்கள், கூரை மற்றும் அனைத்து வழிபாட்டுப் பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்டவை தண்ணீரால் சுத்திகரித்த பிறகு, நாமகட்டி, ஸ்ரீ சூா்ணம் கஸ்தூரி மஞ்சள், பச்சைகற்பூரம், பூங்கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிகிழங்கு மற்றும் பிற வாசனை திரவியக் கலவை கொண்டு செய்த புனித நீரால் கோயில் முழுவதும் சுத்திகரிக்கப்பட்டது. அதுவரை தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

பின்னா், காலை 11 மணி முதல் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

இதில், கோயிலின் சிறப்பு துணை தலைமை நிா்வாக அதிகாரி வரலட்சுமி, விஜிஓ கிரிதா், ஏஇஓ கோபிநாத், கண்காணிப்பாளா் ரமேஷ் பாபு, கோயில் ஆய்வாளா்கள் தனசேகா், முனிகுமாா், கோயில் அா்ச்சகா்கள் பாலாஜி ரங்காச்சாரியாா் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.