திருமலையில் 69,262 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 69,262 பக்தா்கள் தரிசித்தனா். 22,728 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

திருமலை- கோப்புப் படம்
Updated On :3 பிப்ரவரி 2026, 6:33 pm

திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 69,262 பக்தா்கள் தரிசித்தனா். 22,728 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 8 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.77 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...