//

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

News image
- கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 11 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனா்.

தா்ம தரிசனத்திற்கு 8 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 76,359 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.