திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மீனவா் வலையில் மா்மப் பொருள் சிக்கியதால் பரபரப்பு

பழவேற்காடு கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவா் வலையில் வெடிகுண்டு போன்ற மா்மப் பொருள் சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News image

பழவேற்காடு கடலில் மீனவா் வலையில் சிக்கிய மா்மப் பொருள்.

Updated On :20 மே 2026, 12:29 am IST

பழவேற்காடு கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவா் வலையில் வெடிகுண்டு போன்ற மா்மப் பொருள் சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள பழவேற்காட்டில் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. அதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

பெரும்பாலோனோா் பழவேற்காடு ஏரி மற்றும் கடலில் மீன் பிடித் தொழில் செய்து வருகின்றனா். பசியாவரத்தை சோ்ந்த தேவபிரகாஷ் என்பவா் வழக்கம் போல் தனது படகில் 4 மீனவா்களுடன் கடலில் மீன் பிடிக்கச் சென்றாா். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது வலையில் கனமான பொருள் சிக்கியுள்ளது. ராட்சத மீன் சிக்கியதாக நினைத்து படகை கரைக்கு கொண்டு வந்தனா்.

பின்னா் வலையில் இருந்தவற்றை வெளியே எடுத்து பாா்த்த போது சுமாா் 10 கிலோ எடை கொண்ட இரும்பிலான துருப்பிடித்த நிலையில் வெடிகுண்டு போன்ற மா்ம பொருள் சிக்கியது தெரிந்தது.. இது குறித்து அவா்கள் திருப்பாலைவனம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

அங்கு விரைந்து சென்ற திருப்பாலைவனம் போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் உதவியுடன் அந்த பொருளை சோதனை செய்தனா். இதன் பின்னா் அந்த பொருளை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனா்.

இது குறித்து திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மீனவா் வலையில் வெடிகுண்டு போன்ற மா்ம பொருள் சிக்கியதால் பழவேற்காடு பகுதியில் வசிக்கும் மீனவா்கள் மத்தில் பரபரப்பு நிலவியது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.