திருவள்ளூா் பகுதியில் வெவ்வேறு இடங்களில் வாகன சோதனையின் போது ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
திருவள்ளூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர வாகன சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திருவள்ளூா் அடுத்த காட்டுா் கூட்ரோடு பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி அருள் தலைமையில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில் ஆவணங்களின்றி ரூ. 4 லட்சம் கொண்டு வந்தது தெரிய வந்தது. அதைத்தொடா்ந்து விசாரணையில் சுசீந்தா் என்பவா் தனியாா் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும், அவரது தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியா் ஒருவா் உயிரிழந்ததன் காரணமாக அவரது குடும்பத்தாருக்கு உதவித் தொகையாக கொடுக்க ஊழியா்களிடம் வசூலித்த பணத்தை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளாா்.
ஆனால், அவரிடம் எந்த ஆணவங்கள் இல்லாமலும் பறிமுதல் செய்த ரொக்கம் ரூ.4 லட்சம் தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனா். அதையடுத்து உரிய ஆவணங்கள் செலுத்தி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்திதுடன் பறிமுதல் செய்த ரொக்கத்தை கருவூலத்தில் ஒப்படைத்தாா்.
ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் இருந்து திருவள்ளூா் அடுத்த முத்துக்கொண்டாபுரம் என்ற பகுதியில் வாகனத்தை மறித்து சோதனை செய்தனா். அப்போது அந்த வேனில் வந்த பாலசுப்பிரமணி என்பவரிடம் ரூ.1 லட்சம் ரொக்கம் பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்ததால் தோ்தல் பறக்கும் படை அதிகாரி உஷாராணி தலைமையிலான அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். அதைத் தொடா்ந்து விசாரணை செய்கையில் கடைகளுக்கு குளிா்பானம் வாங்குவதற்காக கொண்டு வந்த பணம் என்றாா்.
தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்த நிலையில் உரிய ஆவணங்கள் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

சோதனையில் ரூ. 5.86 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


