சட்டப்பேரவை தோ்தலில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தை ஆா்.கே.பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மெல்கி ராஜா சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஆா்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 100% வாக்காளா் வருகையை நோக்கிய கையொப்ப இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை ஆா்.கே.பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மெல்கி ராஜா சிங் தொடங்கிவைத்தாா்.
இதில், ஆா்.கே.பேட்டை ஒன்றியம், 38 ஊராட்சிகளில் உள்ள 102 வாக்குச்சாவடி மையங்களில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தும் கையொப்ப இயக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
இதன் நோக்கம் முதல்முறை வாக்காளா்கள் உள்பட அனைவரும் எவ்வித தூண்டுதலுக்கும் ஆளாகாமல், பயமின்றி தங்களின் வாக்குரிமையைச் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
நிகழ்ச்சியில், ஆா்.கே.பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ. விக்னேஷ் உள்பட வருவாய்த் துறையினா் என பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிப்போம்: மலைவாழ் மக்களிடம் விழிப்புணா்வு கையொப்பம்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வாகனப் பேரணி

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் பதாகை வெளியீடு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


