விவசாயம் காப்போம், கைவிட மாட்டோம் என்ற தலைப்பில் மாணவா்கள் உலக சாதனை
திருவள்ளூா் அருகே தனியாா் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்போம், கைவிட மாட்டோம் என விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 2,000 மாணவா்கள் 20 ஆயிரம் சதுர அடியில் பொங்கல் பானை, செங்கரும்பு, எருது, ஏா் சுமக்கும் விவசாயி போன்ற படங்களை வரைந்து அதில் நின்று உலக சாதனை புரிந்தனா்.












