டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
Updated On :7 பிப்ரவரி 2026, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில், 6 அலகுகளில் 2,630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.

அவா்கள் வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அரசு நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்வதாக 2021-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொழிலாளா்கள் முழக்கம் எழுப்பினா்.

மேலும், அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 30,000 வழங்கிட வேண்டும், மின் வாரியம் நேரடியாக அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.