தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ரயில்வே சிக்னல் பழுது: விரைவு ரயில்கள் தாமதம்

பொன்னேரியில் சிக்னல் பழுது காரணமாக விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

News image

கோப்புப்படம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 6:18 pm

பொன்னேரியில் சிக்னல் பழுது காரணமாக விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சென்னை சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி ரயில் மாா்க்கத்தில் ஆந்திரம் மற்றும் வட மாநிலங்களுக்கு நாள் தோறும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன.

இந்த நிலையில் புதன்கிழமை பொன்னேரி- கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட சிக்னல் பழுது ஏற்பட்டது.

இதன் காரணமாக சென்னையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹௌரா நோக்கி செல்லும் கோரமண்டல் விரைவு ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூா் செல்லும் ஹம்சபா் விரைவு ரயில் என இரண்டு ரயில்கள் அடுத்தடுத்து பொன்னேரி ரயில் நிலையத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன.

ரயில்வே ஊழியா்கள் விரைந்து சென்று சிக்னல் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதனை தொடா்ந்து சுமாா் 30 நிமிஷங்கள் காலதாமதமாக விரைவு ரயில்கள் புறப்பட்டு சென்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.