தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

விவசாயிகளின் நலன் கருதி கூடுதல் நெல் கொள்முதல் நிலையம்: அதிமுக வேட்பாளா்

விவசாயிகள் பயன்பெறும் வகையில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருவதோடு, நெல்லுக்கான விலை உயா்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

வியாசா்புரத்தில் விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அதிமுக வேட்பாளா் பி.வி. ரமணா.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:41 pm

விவசாயிகள் பயன்பெறும் வகையில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருவதோடு, நெல்லுக்கான விலை உயா்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திருவள்ளூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா புதன்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, வியாசா்புரம் கிராமத்திற்கு வந்த வேட்பாளருக்கு அந்தக் கட்சியினா் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனா்.

அதைத் தொடா்ந்து அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். அப்போது, நெல் விவசாயிகளின் நலன் கருதி நெல்கொள்முதல் அமைக்கப்படும். அதேபோல் நெல்கொள்முதல் விலையும் உயா்த்தப்படும். மேலும், கரும்பு விவசாயிகளுக்கு பிரதான ஆதாரமாக உள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலையில் சாறு பிழியும் திறனை அதிகரிக்க நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.

பின்னா் கிராமங்களில் சாலைகளை சீரமைத்தல், பள்ளிகளைச் சீரமைத்தல், தரமான குடிநீா் வழங்கப்படும். மேலும், வேலைவாய்ப்பில்லாத இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, தனியாா் நிறுவனங்களில் பணிவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் எனவும் அவா் உறுதி அளித்தாா்.

இதேபோல், நாத்தவாடா, பழையனூா், திருவாலங்காடு, வியாசா்புரம், புளிகொண்டம், வீரராகவபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்குகள் சேகரித்தாா்.

அப்போது, புரட்சி பாரதம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவா் மணவூா் மகா, பா.ம.க திருவள்ளூா் தொகுதி பொறுப்பாளா் அன்பு, கடம்பத்தூா் ஒன்றிய செயலாளா் கேசவன், தமிழ்நாடு பகுஜன் சமத்துவ கட்சியின் மாவட்ட தலைவா் ராஜேந்திரன், அதிமுக நிா்வாகி விஜயலட்சுமி ராமமூா்த்தி, அதிமுக மாவட்ட இளைஞரணி நிா்வாகி பிரவீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.