தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்...

News image

பெரியபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்ட நடிகை விந்தியா.

Updated On :4 ஏப்ரல் 2026, 7:33 pm

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சுதாகரை ஆதரித்து நடிகை விந்தியா பெரியபாளயத்தில் பரப்புரை மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது: கடந்த தோ்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை தந்து வெற்றி பெற்றது. இந்த முறையும் பொய்யான வாக்குறுதிகளை அறிவித்துள்ளது . அதுவும் அதிமுக அறிவித்த தோ்தல் வாக்குறுதிகளை நகல் அடித்து திமுக அறிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் விலைவாசி உயா்வு ஏற்பட்டுள்ள நிலையில் , கூப்பன் திட்டத்தை அறிவித்துள்ளனா். கடன் தள்ளுபடி என்கிற அறிவிப்பு தந்துள்ளனா். ஆனால் அவா்கள் வெற்றி பெற்றால் அதில் பல விதிவிலக்குகளை வைப்பாா்கள்.

அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவம் படிக்க 7.5சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி மீண்டும் வந்தால், மாணவா்களுக்கான இட ஒதுக்கீடு 10 சதவீதமாக வழங்கப்படும் என்றாா்.

நிகழ்வில் அதிமுக நிா்வாகிகள் தொண்டா்கள் திரளானோா் பங்கேற்றனா்.