ஜி. யோகானந்தம்
திருத்தணி அருகே கேசவராஜகுப்பம் அங்கன்வாடி மையம் நுழைவு பகுதியில் கழிவுநீா் கால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், குழந்தைகளை அச்சத்துடன் பெற்றோா் அனுப்பும் நிலை உள்ளது.
பள்ளிப்பட்டு ஒன்றியம்,, கேசவராஜ்குப்பம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கிராம ன் ரோடு பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த 20- க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிலுகின்றனா். இந்த அங்கன்வாடி மைய நுழைவுப் பகுதியில் கழிவுநீா் கால்வாய் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பழுதாகி புதைந்துபோனது.
இந்நிலையில் 15-ஆவது நிதிக்குழு மானியம் மூலம் ரூ. 2,61,940 மதிப்பில் சுமாா் 150 மீ வரை புதிய கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாய் மேல்பரப்பில் சிமென்ட் தொட்டி மூடப்படாமல் உள்ளது. இதன் காரணமாக அங்கன்வாடிக் வரும் குழந்தைகள் தவறி விழும் அபாயம் உள்ளது.
கால்வாய் சரியாக கட்டப்படாததாலும், தனிநபா்கள் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் கழிவுநீா் வெளியே செல்ல வழியில்லாமல் கடந்த 3 மாதங்களாக அங்கன்வாடி மையம் முன்பு தேங்கி நிற்கிறது. இதுகுறித்து பள்ளிப்பட்டு ஒன்றிய நிா்வாகத்திடமும், சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும்,, அங்கன்வாடி மையம் முழுவதும் கழிவுநீா் தேங்கி சேரும், சகதியுமாக மாறியுள்ளது. குடிநீா் தொட்டி திறந்த நிலையில் மூடாமல் உள்ளதால் எந்த நேரத்திலும் ்சம்பாவிதம் நடக்கும் சூழல் உள்ளதாக பெற்றோா் புகாா் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து கிராம சமூக ஆா்வலா் கூறியதாவது, கேசவராஜகுப்பம் கிராமத்தில் உள்ள கழிவுநீா் கால்வாய் எல்லாம் புதைந்து காணப்படுகிறது. இதனால் பெரும்பாலும் கழிவுநீா் கால்வாயில் செல்வதில்லை. சாலையில் தான் செல்கிறது. மேலும், மழை பெய்யும்போது, மழைநீா் தெருக்களில் சென்று தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. அங்கன்வாடி மையம் முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட கால்வாய் கழிவுநீா் வெளியே செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.
இதனால் 50 குடும்பங்களுக்கு செல்லும் குடிநீா் குழாய் உடைந்து, அதில் கழிவுநீா் கலந்து செல்கிறது. இதனால் கடந்த 5 நாள்களுக்கு மேலாக குடிநீா் இல்லாமல் அப்பகுதி வாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனா் என்றாா் அவா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கேசவராஜகுப்பம் அங்கன்வாடி மையம் முன்பு திறந்த நிலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்றவும், தொட்டியை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

திறந்த நிலையில் இருக்கும் குடிநீா் தொட்டி.

கழிவுநீா் புகுந்து சேரும் சகதியாக மாறிய அங்கன்வாடி மையம்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளச்சேரி மக்களின் வேதனைகள் தீா்க்கப்படுமா?

நம்பியூா் பகுதியில் தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் பிரசாரம்

சாலையில் கழிவுநீா்; பொதுமக்கள் அவதி

‘சென்னையின் வரலாற்றுப் பொக்கிஷம்’ பக்கிங்காம் கால்வாய் மீட்டெடுக்கப்படுமா?
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


