பூந்தமல்லியில் சிகிச்சையின்போது ஊசி செலுத்தியதில் முதியவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சித்த மருத்துவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (50). சித்த மருத்துவரான இவர், அதே பகுதியில் சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களுக்கு சித்த மருத்துவம் பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (70) என்பவர் உடல்நலக் குறைவு காரணமாக, பெருமாள் நடத்தி வரும் சிகிச்சை மையத்துக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு பெருமாள் ஊசி செலுத்திய சில நிமிஷங்களில் ராஜேந்திரன் உயிரிழந்தார். தகவல் அறிந்து பூந்தமல்லி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ராஜேந்திரன் உடலை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பிரபு தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் சித்த மருத்துவரான பெருமாள் ஆங்கில மருத்துவமும் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் பெருமாளை புதன்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சூரில் வாக்களித்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

மேஜிக் செய்வதாக கூறி தங்க மோதிரம் திருட்டு: மகாராஷ்டிரத்தில் ஒருவர் கைது

1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது

தஞ்சையில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது: 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

