நாடு முழுவதும் 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பிய நபரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாக தில்லி உயர் நீதிமன்றம், சட்டப்பேரவை மற்றும் பல கல்வி மற்றும் அரசு நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் அனுப்பப்பட்டு வந்தன.
இந்த சம்பவத்தில் கர்நாடகத்தின் மைசூரைச் சேர்ந்த ஒருவரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட 47 வயதான ஸ்ரீனிவாஸ் லூயிஸ், வாடகை வீட்டில் இருந்து சனிக்கிழமை தில்லி போலீஸ் மற்றும் உள்ளூர் போலீஸ் குழுக்களால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
லூயிஸ் ஒரு முதுகலைப் பட்டதாரி என்றும், பெங்களூருவைச் சேர்ந்தவர் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர் வேலையின்றி, ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தனது தாயாருடன் வசித்து வருகிறார்.
அவர் மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணையின்போது, மின்னஞ்சல்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு தளங்கள் வழியாக நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட மிரட்டல் செய்திகளை அனுப்பியதாக அவர் ஒப்புக்கொண்டார் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த மிரட்டல்களைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Summary
Delhi Police has arrested a man from Mysuru in Karnataka for allegedly sending more than 1,100 hoax bomb threats to schools, high courts and government offices across the country, officials said on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேஜிக் செய்வதாக கூறி தங்க மோதிரம் திருட்டு: மகாராஷ்டிரத்தில் ஒருவர் கைது

1100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பிய மைசூா் நபா் கைது

அரியலூா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ராஜஸ்தானின் பல்வேறு அஞ்சலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



